Tuesday, March 19, 2024

Annual Festivals - March

Panguni Uththiram – பங்குனி உத்திரம்

Panguni Uththiram

Panguni Uththiram is celebrated in the Tamil month of Panguni (March/April) when the star is Uththiram coincides with full Moon day. This day comes on the twelfth month in the Tamil calendar and on the day when twelfth star, Uththiram shines.

This day signifies celestial weddings (Divine marriages). On this day, the marriage of Goddess Parvathi in the form of Gowri and Lord Siva (Gowri kalyanam), Lord Murugan and Deivanai, Rama and Sita took place. Also this day is the Birthday of Lord Iyappan.

On this day Goddess Mahalakshmi represented in human form on earth from the ocean of milk (after the ocean was churned by the Gods and the demons) and hence it is celebrated as Mahalakshmi Jayanthi.

It is usual to see Lord Siva, Lord Muruga and Goddess Ambal in their wedding attire and pray on this day. Many Devine miracles have been seen on this auspicious day which is best suited for destroying all sins and removing enmity.

Hence this full moon day depicts the union of the soul with the supreme energy.

The best way to celebrate Panguni Uththiram day is after an early morning bath, fast with purity and pray in a nearby temple and perform poojas at home.

பங்குனி உத்திரம்

தமிழ் நாள்காட்டியின் படி பன்னிரண்டாவது மாதம் பன்னிடண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனிதத் திருநாள் பங்குனி உத்திரம்.

பங்குனி உத்திரம் என்றாலே நினைவுக்கு வருவது திருக்கல்யாணம் அல்லது தெய்வத் திருமணங்கள் தான். பங்குனி உத்திரத்தைத் திருமண விரத நாள் என்றும் அழைப்பர். இன்றைய நாளில் கௌரி கல்யாணம் என்று அழைக்கப்படும் கௌரி உருவத்தில் பார்வதியை சிவபெருமான் மணந்தார். முருகக்கடவுள் தெய்வயானையை மணம் முடித்ததும், ஸ்ரீராமர் சீதையை மணம் புரிந்ததும் இன்றைய நாளில் தான். அதே தினத்தில் தான் அய்யப்ப சுவாமிகள் பிறந்ததும் ஆகும்.

இறைவரும் அரக்கரும் பாற்கடலைக் கடையும் பொழுது மகாலட்சுமி அம்மையார் மனித உருவத்தில் இம்மண்ணில் உதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இத்தினத்தை மகாலட்சுமி ஜயந்தி என்றும் கொண்டாடுவர்.

சிவன், முருகன், அம்பாள் போன்ற தெய்வங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து, இறைவனைத் திருமணக்கோலத்தில் கண்டு வழிபடும் நாள் இப்பங்குனி உத்திரத் திருநாள்.

தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.

எனவே ஆன்மாவும் ஆதிசக்தியும் இணைதலையே இப் பூரணை தினம் குறிக்கும்.

பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருந்து அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதோடு வீட்டிலும் விரத பூஜைகள் செய்வது சிறப்பு.