Tuesday, March 19, 2024

 

Annual Festivals - December

Aruthra Tharisanam

Aruthra Tharisanam 

Aruthra Tharisanam is, a festival dedicated to Lord Natarajar and, is a major event in Shiva temples .This festival is observed during the full moon night in the Tamil month of Markazhi when the star is Thiruvathirai. Thiruvathirai in Tamil means Aruthra in North Indian language.

This is a grand festival in which Abishekams are offered to Lord Natarajar and his consort Sivakami. These rituals are held in the early morning hours, when the moon is still shining brightly. A grand procession follows later.

Legends behind Thiruvathirai

It is believed that this is the day on which Goddess Parvathi first met Lord Shiva. Others say that this is the day on which Lord Shiva gives Tharisanam as Lord Natarajar. So, devotees celebrate the cosmic dance of the Lord.
The other legendary story is about Nandanar who was an ardent devotee of Lord Shiva and an untouchable. Though he wanted to visit Chidambaram temple, one of the greatest temples of Lord Natarajar, his worry was that he may not be able to enter the temple owing to his caste. But when he was in front of the temple, he merged with the Lord in a blaze of light, which is celebrated as the Aruthra Tharisanam day as Lord Shiva gave his Tharisanam to Nandanar on this day.

Thiruvathirai Kali

A devotee of Lord Shiva called Senthanar lived with his wife in Chithambaram. When devotees of Lord Shiva visited them they treated them well. But once due to rains the firewood got wet and it was difficult to make food. When they were saddened a devotee came and Senthanar’s wife managed to make some Kali for the devotee from rice and Uzundu flour mixed with Sarkarai and ghee. This day was month of Markazhi full moon and the star was Thiruvathirai. The devotee ate the Kali and was well satisfied and praised them. Senthanar couple were delighted with his remarks.

When they went to visit the Lord next day they found Kali on their way to the temple and on Lord Natarajar’s mouth. They realised that the visitor to their house was in fact Lord Natarajar and they prayed him. From this day on Lord Natarajar is offered Kali on every Thiruvathirai day.

Fasting Ritual
You have a bath at 3AM and without eating anything, go to Sivan temple in your vicinity and take part and celebrate the Thiruvathirai Abishekam at 4 in the morning and fast. Thiruvathirai day is very auspicious and fasting on this day is very beneficial to all. You may eat a small amount of Kali during this fast.


ஆருத்திரா தரிசனம்

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வட மொழியில் ஆருத்திரா என்று பெயர்.
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜர் அழகு கோலத்தில் திருநடனம், செய்து காட்சி தருகிறார். ஆருத்திரா தரிசனம் என்று அழைக்கப்படும் இந்நாள் சிவனுக்கு உகந்த நாள். இத்தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் தோற்றுவித்த நாள் ஆருத்திரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்

புராணக்கதைகள்
இத்தினத்தில் பார்வதி அம்மையார் சிவபெருமானை முதல் முறையாக சந்தித்ததாக கூறப்படுகிறது. வேறு சிலர் இத்தினத்தில் சிவபெருமான் நடராஜர் உருவத்தில் வந்து தரிசனம் கொடுத்ததாக நம்புகிறார்கள்.
நந்தனார் என்ற சிவபக்தன் நடராஜப் பெருமானின் கோவில்களில் ஒன்றான சிதம்பரத்திற்கு போக விருப்பம் உடையவராய் இருந்தார். ஆனால் தன் சாதிக் குறைவினால் கோவிலுக்குள் போக முடியாமல் வெழியே மனம் குழம்பி நின்றபோது சிவபிரானின் ஒளிவீச்சோடு இரண்டறக் கலந்து விட்ட தினம் தான் ஆருத்திரா தரிசனம் என்று கூறப்படுகிறது.

திருவாதிரைக் களியின் கதை
சேந்தனார் என்னும் சிவபக்தர் சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்த காலத்தில் சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒரு முறை பலத்த மழை காரணமாக விறகெல்லாம் நனைந்து விட்டபடியால் அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் ஒரு சிவனடியார் அங்கு வந்தார்.

சேந்தனாரின் மனைவி எப்படியோ ஒருவாறாக நெருப்பை பற்றவைத்து அரிசிமா உளுத்தம்மா சேர்த்து சர்க்கரையும் நெய்யும் கலந்து களி தயாரித்து அங்கு வந்த சிவனடியாருக்குப் படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி. திருவாதிரை நட்சத்திரம். வந்தவர் அதைச் சாப்பிட்டு முடிந்ததும், இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். இதனைக்கேட்ட சேந்தனார் தம்பதிகள் ஆனந்தம் அடைந்தனர்.

மறுநாள் காலையில் அவர்கள் நடராஜப் பெருமானை தரிசிக்கச் சென்றபோது வழி எல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயிலும் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போய் விழுந்து வணங்கினார்கள். அன்று முதல் நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று.

விரத முறை

உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை நான்கு மணிக்கு கண்டு களிக்கலாம். திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.